போராட்டம்…போராட்டம்… என்றால் பொருளாதாரம் எப்படி வளரும்?: தமிழிசை ஆவேசம்!

 

போராட்டம்…போராட்டம்… என்றால் பொருளாதாரம் எப்படி வளரும்?: தமிழிசை ஆவேசம்!

 10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

சென்னை:  வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்குப் பணியிழப்பு ஏற்படாது என்று கூறிய பின்னரும் போராட்டம் நடத்தினால் பொருளாதாரம் எப்படி வளரும் என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  10 பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு குறித்து அறிவித்தார். அதன்படி 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகள் ஆகின்றன. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு  இந்திய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு  எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இதற்கு எதிராக நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவித்தது. 

bank

இந்நிலையில் வங்கி ஊழியர்களின் இந்த போராட்டம் குறித்து தமிழக பாஜக மாநில  தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், வங்கிகள் இணைப்பால் ஊழியர்களுக்குப் பணியிழப்பு ஏற்படாது என்று மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 
 அவர்கள் உறுதி அளித்த பின்னரும் போராட்ட அறிவிப்பு ஏன்? போராட்டம்?போராட்டம்?என்றால் எப்படி வளரும் பொருளாதாரம்?வேலைவாய்ப்புக்கு முதலீடு எப்படி வரும்?பொருளாதார சிரமங்களைச் சரிசெய்ய வேண்டாமா? ‘ என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். 

 

முன்னதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ‘வங்கிகள் இணைப்பு: 27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக இணைப்பது உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதை இடதுசாரிகள் எதிர்த்துள்ளனர். இதில் ஆச்சரியம் இல்லை. திருப்பூரில் டவுன் பஸ் விட்டபோது குதிரை வண்டி ஓட்டுபவர்கள் வேலை இழப்பார்கள் என்று கூறி சாலைமறியல் செய்தவர்கள்’ என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.