போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள்: ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் வேண்டுகோள்

 

போராட்டத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புங்கள்: ஆசிரியர்களுக்கு செங்கோட்டையன் வேண்டுகோள்

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

சென்னை: மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பிட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ அமைப்பினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது என எச்சரித்திருந்தும் அவர்களது போராட்டம் தொடர்கிறது.

jacto geo

அரசு ஊழியர்களின் இந்த போராட்டம் 7-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. இந்த போராட்டம் நீடிக்கும் பட்சத்தில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற அக்கறை இல்லாமல் தமிழக அரசு பேச்சுவார்த்தையை தாமதப்படுத்தி வருவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்பிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

dpi office

மேலும், விளையாட்டுதுறையில் தங்கப்பதக்கம் பெறுபவர்களுக்கு 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தின் 100 இடங்களில் சிறிய ஸ்டேடியம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.