போய் வா மகனே…! சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

 

போய் வா மகனே…! சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

துரதிர்ஷ்டவசமாக மீட்பு போராட்டத்தின் போது  ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த குழந்தை சுஜித்  உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள  நடுக்காட்டுப்பட்டியில்  சுஜித் என்ற 2 வயது குழந்தை தனது வீட்டின் தோட்டத்திலிருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். கடந்த 25 ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு விழுந்த அந்த குழந்தையை மீட்க 80 மணிநேரத்தையும்  கடந்து மீட்பு படையினர் முயற்சி செய்தனர். தற்போது ஆழ்துளைக் கிணற்றின் அருகில் சுரங்கம்  போல குழி தோண்டப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. ரிக் இயந்திரம் பழுதானதால் தற்போது போர்வெல் மூலம் துளையிட்டு பின்பு மீண்டும் ரிக் இயந்திரம்  மூலம் பள்ளம் அகலப்படுத்தப்பட இருந்த நிலையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. 

sujith

இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக மீட்பு போராட்டத்தின் போது  ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பிறகு சுஜித் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை வயிற்றுப் பகுதி சிதைந்த நிலையில் அவர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.  இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட உடல்  பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  அப்போது மீட்பு பணியின் போது  இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மருத்துவமனை வளாகத்திற்கு வருகை தந்தனர். 

sujith

பின்னர் உடல் பிரேத பரிசோதனை முடிந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்தில் வைக்கப்பட்டு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சுஜித்தின் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.