போன வருஷம் ப்ளஸ் டூ முடிச்சவங்களுக்கு இப்போ கம்ப்யூட்டர் தர முடிவு பண்ணியிருக்காங்க… எப்போ கைக்கு கிடைக்குமோ?

போன வருஷம் ப்ளஸ் டூ முடிச்சவங்களுக்கு இப்போ கம்ப்யூட்டர் தர முடிவு பண்ணியிருக்காங்க… எப்போ கைக்கு கிடைக்குமோ?

சென்ற 2017- 2018 கல்வியாண்டில் 12-ம் வகுப்பை முடித்து, தற்போது கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கும், தற்போது 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் வழங்க 15.53 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் தயார் நிலையில் உள்ளதாக சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

வருடக்கணக்கில் தாமதித்து வழங்குவதால், தற்போது இந்த மடிக்கணினிகளை அனைத்து மாவட்டங்களில் உள்ள கல்வி அலுவலகங்களுக்கு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மடிக்கணினிகளைப் பெறும் பள்ளிகள், உரிய பாதுகாப்புடன் அதை வைத்து, இனியும் தாமதம் செய்யாமல், உடனுக்குடன் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எல்காட் நிறுவனத்தின் அனுமதி பெற்ற பின்னரே ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு மடிக்கணினிகளை மாற்ற வேண்டும், மடிக்கணினிகளை, கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் ((EMIS)) உள்ள தரவுகளின் படியே மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளிக்கு வரும் உண்மையான மாணவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

மடிக்கணினிகளை வழங்கும் முன் சரிபார்த்து, உரிய முறையில் வழங்கி, பதிவேட்டில் பார்கோடை மாணவரின் பெயருக்கு நேராக பதிவு செய்ய வேண்டும். மடிக்கணினிகளை முறைகேடாக வழங்கும் பள்ளிகள் மீதும், கல்வி அலுவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
புள்ளைங்க படிச்சு முடிச்சு வேலைக்குப் போறதுக்குள்ளவாவது கொடுங்கப்பா!