‘போட்றா வெடிய’ : பிகில் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

 

‘போட்றா வெடிய’ : பிகில்  படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

பிகில்  படத்தின் டிரைலர்  இன்று வெளியாகவுள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

பிகில்  படத்தின் டிரைலர்  இன்று வெளியாகவுள்ள நிலையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. 

bigil

நடிகர் விஜய் – இயக்குநர்  அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். தெறி, மெர்சல் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர்  இன்று மாலை  6 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். தற்போது பிகில்  படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

முன்னதாக பிகில் டிரைலரின்  ரன்னிங் டைம் இரண்டரை நிமிடத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று  தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.