போட்டி போட்டு கடனுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்…… கடன் வாங்க நீங்க ரெடியா?

 

போட்டி போட்டு கடனுக்கான வட்டியை குறைக்கும் வங்கிகள்…… கடன் வாங்க நீங்க ரெடியா?

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி வகிதத்தை குறைத்ததையடுத்து, வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்க தொடங்கியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்களுக்கு வீடு, வாகன கடனுக்கான மாதந்திர வட்டி செலவினம் குறையும், புதிய கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும்.

[16:30, 3/30/2020] Gps: நம் நாட்டின் பொருளாதாரம் ஏற்கனவே மந்தகதியில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் ரூபத்தில் பொருளாதாரத்துக்கு மற்றொரு அடி விழுந்துள்ளது. இதனையடுத்து பொருளாதாரத்துக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில் யாரும் எதிர்பாராத வகையில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்து 4.40 சதவீதமாக நிர்ணயம் செய்தது.

பேங்க் ஆப் பரோடா

ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்ததால் வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்த மாதிரியே வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்க தொடங்கி விட்டன. முதலாவதாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடனுக்கான வட்டியை குறைத்தது. இந்நிலையில், நேற்று பேங்க் ஆப் பரோடா, தனிநபர், ரீடெயில் மற்றும் குறு, சிறு மற்றம் நடுத்த நிறுவனங்களுக்கான கடனுக்கான வட்டி விகிதத்தை 7.25 சதவீதமாக குறைத்துள்ளது. ரெப்போ அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 28ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பேங்க் ஆப் பரோடா தெரிவித்துள்ளது. 

எஸ்.பி.ஐ.

பேங்க் ஆப் இந்தியாவும் ரெப்போ அடிப்படையிலான கடனுக்கான வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் குறைத்து 7.25 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. மற்ற வங்கிகளும் இதனை பின்பற்றி கடனுக்கான வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வங்கிகளின் வட்டி குறைப்பு நடவடிக்கையால், வாடிக்கையாளர்களுக்கு வீடு, வாகன கடனுக்கான மாதந்திர வட்டி செலவினம் குறையும், புதிய கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும்.