போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்.. எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பள்ளி மாணவர்கள் !

 

போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்.. எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பள்ளி மாணவர்கள் !

அந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களைத் தனி அறைக்கு அழைத்து சென்று பிறப்புறுப்பில் அடித்துத் துன்புறுத்தியதாக, அந்த மாணவர்களின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கோவை மாவட்டம் சூலூரில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயா பள்ளியில் தலைமை ஆசிரியராக மேகநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் இரண்டு மாணவர்களைத் தனி அறைக்கு அழைத்து சென்று பிறப்புறுப்பில் அடித்துத் துன்புறுத்தியதாக, அந்த மாணவர்களின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த சூலூர் காவல் துறையினர், தலைமை ஆசிரியர் மேகநாதனையும் அதற்கு உடந்தையாக இருந்த பள்ளி ஆசிரியைகள் அருணா, தமிழரசி மற்றும் திவ்யா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 

ttn

ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்து கேந்திர வித்யாலயா பள்ளி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த மாணவர்கள் இரண்டு பேரும் பள்ளி நேரத்தில் செல்போன் உபயோகப் படுத்தியதால் அவர்களை ஆசிரியர்கள் அடித்ததாகவும், ஆசிரியர்கள் மீதான வன்மம் காரணமாக அவர்கள் மீது பொய் புகார் கொடுத்ததாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.