பொள்ளாச்சி விவகாரத்தை பேசாமல் இருப்பதே நல்லது ! சர்ச்சையைக் கிளம்பும் சமந்தா !

 

பொள்ளாச்சி விவகாரத்தை பேசாமல் இருப்பதே நல்லது ! சர்ச்சையைக் கிளம்பும் சமந்தா !

பொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகை சமந்தா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: பொள்ளாச்சி விவகாரம் குறித்த கேள்விக்கு, அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது என்று நடிகை சமந்தா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி விவகாரம்

pollachi

பொள்ளாச்சியில் கடந்த ஏழு ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை மயக்கி ஒரு கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து அவர்களை மிரட்டி வந்துள்ள சம்பவம் தமிழகத்தையே குலைநடுக்க வைத்தது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி நெஞ்சைப் பதைபதைக்க வைத்தது.  இது தொடர்பாகத் திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், சபரி ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனாலும்  இவ்விவகாரம் குறித்து இன்னும் சிபிசிஐடி போலீசார் தான் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்து மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

சமந்தாவின் சர்ச்சை கருத்து 

samantha

இந்த சம்பவம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் முதல் சாமானிய மனிதன் வரை ஒட்டுமொத்த தமிழகமே குரல் கொடுத்து ஆளுங்கட்சியைக் கிடுகிடுக்க வைத்தது. இந்த விவகாரம் குறித்து ஊடகங்களோ பல்வேறு திரைத்துறையினரிடம் கருத்துக் கேட்டு வருகின்றது. அந்த வகையில், நடிகை சமந்தாவிடம் செய்தி நிறுவனம் ஒன்று பொள்ளாச்சி விவகாரம் குறித்து கருத்துக் கேட்டுள்ளது. அதற்கு பதிலளித்த சமந்தா, ‘அந்த மாதிரி சம்பவங்களை அதிகம் பேசாமல் இருப்பதே நல்லது. சில ஆயிரம் பேருக்குத் தெரிந்த அந்த சம்பவம், நான் பேசினால் பல லட்சம் பேருக்கு தெரியும். நாமே அதை விளம்பரப்படுத்தியது போலாகி விடும்.அதனால் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பேசி வருகிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

கடுப்பான நெட்டிசன்ஸ்

samantha 2 ttn

சமந்தாவின் இந்த பதில் தான் அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்களோ, உங்கள் வீட்டிலோ, அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது போன்று ஒரு சம்பவம் நடந்தால் இப்படி தான் பேசியிருப்பீர்களா? வீணாப்போன நடிகை ஸ்ரீரெட்டி கூட இதற்காக குரல் கொடுத்து வருகிறார்? ஆனால் நீங்களோ புத்திசாலித்தனமாகப் பேசுகிறேன் என்ற பெயரில் இது போன்ற தேவையற்ற கருத்துக்களைப் பரப்புவதா? என்று சாடி வருகின்றனர். 

பாலியல் குற்றத்திற்கு நிகரானது

abuse

சமந்தாவின் இந்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாக பார்க்கப்பட்டாலும், இது போன்று  சமூகத்தைச் சீர்குலைக்கும் செயல்களை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது ஏற்புடையதல்ல. குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை என்பது நாளுக்கு நாள் சமூகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தோமேயானால், இது போன்ற பிரபலங்களின் கருத்துக்கள் எளிதில் மக்களை போய் சென்றடைந்து விடும். அதனால் தான் இவர்களிடம் இந்த கேள்வி முன்வைக்கப்படுகிறது. ஆனால் இது குறித்துப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவது கூட பாலியல் குற்றத்திற்கு நிகரானதுதான். 

உயர்நீதிமன்ற மதுரை கிளையே நிர்பயா வழக்குக்கு அளித்த முக்கியத்துவம் பொள்ளாச்சி வழக்கு அளிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்திருக்கும் நிலையில், நடிகை ஒருவர் இது போன்று பொறுப்பற்ற முறையில் கருத்து தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலாவது பார்த்து பேசுங்க சமந்தா மேடம்?!