பொள்ளாச்சி வழக்கு: அடையாளத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி.: ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

 

பொள்ளாச்சி வழக்கு:  அடையாளத்தை வெளியிட்ட கோவை எஸ்.பி.:  ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு  வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை  வழக்கில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட்டதற்கு இழப்பீடு  வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை

criminals

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பாலியல் கொடுமை குறித்து பாதிக்கப்பட்ட பெண் தைரியமாகப் புகார் கொடுத்தது பாராட்டுக்குரியது என்றாலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களைக் கோவை எஸ்பி பாண்டியராஜன் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு 

hc

இதையடுத்து திருச்சியைச் சேர்ந்த இளமுகில் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘பாலியல் உட்பட பல்வேறு குற்ற வீடியோக்கள், ஒலிப்பதிவுகள் பொதுவெளியில் அதிகம் பரப்பப் படுகின்றன. பாலியல் வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள், பாதிக்கப் பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

பாலியல் வழக்கில் விசாரணையை விரைவில் முடிக்கவும், விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும், சமூக வலைதளங் களில் பாலியல் தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள், ஒலிப்பதிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு 

abuse ttn

இந்த மனு நீதிபதிகள் என். கிருபாகரன் எஸ்.எஸ். சுந்தர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பாலியல் வழக்கை சிபிஐக்கு மாற்றி பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டவரின் அடையாளம் இல்லாமல் புதிய அரசாணை பிறப்பிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்துடன் அரசாணை வெளியிட்டதால் அப்பெண்ணுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண்ணுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

கோவை எஸ்பி மீது நடவடிக்கை 

kovai sp ttn

‘பாலியல் விவகாரம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை இணையதளங்களிலிருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்ட கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் செயல்பாடும் கடும் கண்டனத்துக்குரியது. அவர் மீது தமிழக அரசு துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தனர்.