பொருளாதார வீழ்ச்சியை மறைக்க மதவாதத்தை பயன்படுத்தும் பாஜக – சீதாராம் யெச்சூரி!

 

பொருளாதார வீழ்ச்சியை மறைக்க மதவாதத்தை பயன்படுத்தும் பாஜக – சீதாராம் யெச்சூரி!

ஜூன் மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின் படி இந்திய பொருளாதாரம் மேலும் 0.2 சதவீதம் அளவிற்குச் சரிந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை

சந்திராயனின் வேகத்திற்கு இணையாக இந்திய பொருளாதாரம் வளர்வதாக மோடி அரசும் அமைச்சர்களும் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும், வெளிவரும் புள்ளிவிவரங்களும் தகவல்களும் அதற்கு நேர்மாறான உண்மையை பறைசாற்றுகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி மெல்லமெல்ல அடியெடுத்து வைக்கிறது என்பதை லைவ்மிண்ட் செய்தி நிறுவனம் ஆதாரங்களுடன் விளக்கி எழுதியுள்ள கட்டுரையை மேற்கோள்காட்டி சீதாராம் யெச்சூரி பாஜகவை விளாசியுள்ளார். ”ஜூன் மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் தொடர்பான புள்ளி விவரங்களின் படி இந்திய பொருளாதாரம் மேலும் 0.2 சதவீதம் அளவிற்குச் சரிந்துள்ளது என தெரிகிறது. இதனால் ஒவ்வொரு துறைகளும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை என தெரிவித்துள்ளது.

Livemint Report

பொருளாதார பாதிப்பால் அன்றாட தேவைக்குக் கூட பொருள் ஈட்ட முடியாத அளவிற்கு மோசமான நிலையில் மக்கள் தவிக்கிறார்கள். கடந்த 2014ம் ஆண்டு முதல் கார்ப்பரேட்டுகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கும் வகையில் மோடி அரசு விவசாயிகளையும், பொதுமக்களையும் நிர்க்கதியாக்கியுள்ளது. சிறு வணிகர்கள், தொழில் முனைவோரும் கூட இந்தச் சுழலில் தப்ப முடியவில்லை. அனைவரின் வளர்ச்சியையும் மோடி ஆட்சி சிதைத்துள்ளது என்பது நிதர்சனமான உண்மை. இந்த பொருளாதார நெருக்கடியை திசைதிருப்ப மோடி அரசு மதவெறிப் பாதையில் வேகமாகச் செல்கிறது”. என யெச்சூரி காட்டமாக தெரிவித்துள்ளார்.