பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான்..! ப.சிதம்பரம் அதிரடி ட்வீட்

 

பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான்..! ப.சிதம்பரம் அதிரடி ட்வீட்

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மீட்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய தின அறிவிப்பில்  மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை மீட்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 நாட்களாக அறிவித்து வருகிறார். நேற்றைய தின அறிவிப்பில்  மத்திய அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுமே தனியார் மயமாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். தேசிய அளவில் முக்கியத்துவம் இல்லாத அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இனி தனியார்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் “பிரதமரும், நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான்..! ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.