பொருளாதாரத்தை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை – சோனியா காந்தி விமர்சனம்!

 

பொருளாதாரத்தை பற்றி பிரதமர் மோடிக்கு கவலையில்லை – சோனியா காந்தி விமர்சனம்!

தவறான பொருளாதார கொள்கையால் கடந்த 6 ஆண்டுகளில் 9 மில்லியன் வேலைவாய்ப்புகளை இழந்துவிட்டோம் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். 

கட்சி தலைமையக நிகழ்ச்சியில் பேசிய சோனியா காந்தி, பிரதமர் மோடிக்கு அதளபாதாளத்தில் கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை பெற்றி அக்கறை இல்லை. அவருக்கு தலைப்பு செய்தியை நிரப்புவதிலேயே குறியாக இருக்கிறார். தாய்லாந்து மாநாட்டின்போது பிரதமர் மோடி முன்னிலையில் கையெழுத்தாகும் வர்த்தக ஒப்பந்தங்கள், விவசாயிகள், சிறுவியாபாரிகள், சிறிய தொழில் நிறுவனங்களுக்கு சுமையாக அமையும்.

Sonia

இதனிடையே சோனியாவின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், திடீரென விழித்தெழுந்து தாய்லாந்தில் நடைபெறும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து சோனியா கருத்து தெரிவிப்பது சரியல்ல என பதிலளித்துள்ளார்.