பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

 

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2 பேருக்கு கூட்டாக அறிவிப்பு

நடப்பாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): நடப்பாண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதாக மதிக்கப்படுவது நோபல் பரிசு. இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2018-ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, 2018-ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டி.நார்தாஸ், பால் எம்.ரோமர் ஆகிய 2 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பொருளாதார பதிப்புகள் குறித்து ஆய்வு செய்ததற்காக வில்லியம் டி.நார்தாஸிற்கும், பொருளாதரத்தில் தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்ததற்காக பால் எம்.ரோமருக்கும் நோபல் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.