பொய் சொல்கிறார் கனிமொழி – தமிழிசை குற்றச்சாட்டு

 

பொய் சொல்கிறார் கனிமொழி – தமிழிசை குற்றச்சாட்டு

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி பொய் பிரச்சாரம் செய்து வருவதாக பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஐபி தொகுதி 

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில், பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், திமுக சார்பாக கனிமொழி மற்றும் பாஜக சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் நேரடியாக மோதும் தூத்துக்குடி தொகுதி இந்த தேர்தலில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக கருதப்படுகிறது.

தமிழிசை

இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக மட்டுமே இருந்து வந்த கனிமொழி முதன்முறையாக மக்களவைத் தேர்தலில் களமிறங்க இருப்பதால் வெற்றி பெரும் முனைப்பில் இருக்கிறார். தமிழிசையும் தாமரையை மலர வைத்தே தீர வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறார். இந்நிலையில், ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவமும் சேர்ந்து தூத்துக்குடியை ஹாட் தொகுதியாக மாற்றி இருக்கின்றன.

கனிமொழி பொய் சொல்கிறார் 

கனிமொழி

இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக வேட்பாளர் தமிழிசை, ” திமுக வேட்பாளர் கனிமொழி பொய் தகவல்களைக் கூறி பரப்புரை செய்து வருவதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி குறித்து தரம் தாழ்ந்து விமர்சித்து வரும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார். அதோடு,திமுக தலைவர் ஸ்டாலினால் முதல்வராக முடியாது என்றும், அதைப்போல அவர் பரிந்துரைக்கும் ராகுல் காந்தியால் பிரதமராக முடியாது என்றும் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க 

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: டிசர்ட்டில் அழகிரி, ஆனாலும் ஸ்டாலினுடன் செல்பி எடுத்த இளைஞர்; வைரல் போட்டோ!