“பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களை நம்பாதீர்கள்” – அட்வைஸ் செய்த ராமதாஸ்… வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

 

“பொய்யான வாக்குறுதி அளிப்பவர்களை நம்பாதீர்கள்” – அட்வைஸ் செய்த ராமதாஸ்… வச்சி செய்யும் நெட்டிசன்கள்!

இன்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களை நம்பாதீர்கள் என்று டாக்டர் ராமதாஸ் வாழ்த்து கூறினார். அவருக்கு நெட்டிசன்கள் கடுமையான பதிலடி அளித்து வருகின்றனர்.பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று தேசிய வாக்காளர் தினம்.

இன்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பொய்யான வாக்குறுதிகளை அளிப்பவர்களை நம்பாதீர்கள் என்று டாக்டர் ராமதாஸ் வாழ்த்து கூறினார். அவருக்கு நெட்டிசன்கள் கடுமையான பதிலடி அளித்து வருகின்றனர்.

national election day

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இன்று தேசிய வாக்காளர் தினம். இனி வரும் தேர்தல்களிலாவது பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுபவர்களை நம்பாமல், மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டு அவர்களை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்காளர்கள்  விழிப்புணர்வு பெற வேண்டும்!” என்று கூறியிருந்தார்.

இன்று தேசிய வாக்காளர் தினம். இனி வரும் தேர்தல்களிலாவது பொய்யான வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுபவர்களை நம்பாமல், மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டு அவர்களை தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வாக்காளர்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்!

இதற்கு பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். சௌந்தர் என்பவர், “ஒருத்தர் 15 லட்சம் தரன்னு சொன்னாருங்கையா இன்னும் தரவே இல்ல” என்று குறிப்பிட்டிருந்தார். வட சென்னை பிரபலம் என்ற ஐ.டி கொண்ட நபர், “வாக்குறுதி அளித்து ஏமாற்றுபவன் ஒருபுறம், ஜாதி ஓட்டுக்களை காண்பித்து 500 கோடியை ஆட்டைய போடுபவன் மறுபுறம்” என்று கூறியுள்ளார். காண்ட்டிராக்டர் நேசமணி என்ற ஐடி கொண்டவர், “கார் உள்ளவரை பார் உள்ளவரை பைந்தமிழ் உள்ளவரை கூட்டணி தர்மம் மாறாதவர் டாக்டர் அய்யா.. விழிப்புணர்வு பெற்று நாம் உறுதி மொழி ஏற்போம்..” என்று குறிப்பிட்டுள்ளார். இப்படி பலரும் ராமதாஸ் பதிவை விமர்சித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாக்குறுதி அளித்து ஏமாற்றுபவன் ஒருபுறம்,
ஜாதி ஓட்டுக்களை காண்பித்து 500 கோடியை ஆட்டைய போடுபவன் மறுபுறம்….
இந்த இருவரும் இருக்கையில் நன்மை செய்பவன் இனிமேல் தான் பிறந்து வரவேண்டும்.

ஒருதர் 15 லட்சம் தரன்னு சொன்னாருங்கையா இன்னும் தரவே இல்ல