பொம்மை முகமூடி…மிளகாய் பொடி: பக்கா பிளான் போட்டு லலிதா ஜுவல்லரியில் நகைகளை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்!

 

பொம்மை முகமூடி…மிளகாய் பொடி: பக்கா பிளான் போட்டு லலிதா ஜுவல்லரியில் நகைகளை ஆட்டைய போட்ட கொள்ளையர்கள்!

முகமூடி, கை  க்ளவுஸ் , மோப்ப நாயிடமிருந்து தப்பிக்க மிளகாய் பொடி  என்று பக்காவாக திட்டம் போட்டு திருடி சென்றுள்ளனர். 

திருச்சி: பிரபல நகை கடையில் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பொம்மை முகமூடி  அணிந்து வந்து கைவரிசை காட்டி சென்றுள்ளது சிசிடிவி காட்சிகளின் மூலம்  தெரியவந்துள்ளது. 

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே பிரபல நகை கடையான லலிதா ஜுவல்லரி நேற்று முன்தினம் நள்ளிரவு  நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து ஊழியர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அங்கு ஆய்வு செய்தனர். கொள்ளையர்கள்  பின்பக்க சுவர் வழியாகத் துளையிட்டு  வந்து நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது. சுமார் 13 கோடி மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதால் இந்த விவகாரம் குறித்து போலீசார்  தீவிர  விசாரணை நடத்தி வருவதோடு, அங்குள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து செய்தனர். 

lalitha

அதில் பொம்மை முகமூடி அணிந்த 2 பேர் கடைக்குள் புகுந்து கொள்ளை அடித்திருப்பது  தெரிய வந்துள்ளது. அதிகாலை 2 மணிநேரம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட கொள்ளையர்கள் முகமூடி, கை  க்ளவுஸ் , மோப்ப நாயிடமிருந்து தப்பிக்க மிளகாய் பொடி  என்று பக்காவாக திட்டம் போட்டு திருடி சென்றுள்ளனர். 

lalitha

இதனால் அதிர்ச்சியடைந்துள்ள காவல்துறை,  நகைக்கடை  ஊழியர்கள் 120 பேரின்  கைரேகைகளையும், காவலாளிகளின் கைரேகைகளையும் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த நகை கொள்ளையை  வடமாநிலத்தவர்கள் செய்தார்களா என்ற கோணத்தில்   விசாரித்து வரும் போலீசார், அங்குள்ள வணிக வளாகங்கள், லாட்ஜ் போன்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.