பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

 

பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பிற்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

பொன். மாணிக்கவேலின் பணி நீட்டிப்பிற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

டெல்லி: பொன். மாணிக்கவேலின் பணி நீட்டிப்பிற்கு தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தமிழகம் முழுவதும் நடந்த சிலை கடத்தல் தொடர்பான அனைத்து  வழக்குகளையும் விசாரிக்க ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் தனிப்படை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து விசாரணையை தொடங்கிய பொன்.மாணிக்கவேல் தஞ்சைப் பெரிய கோயிலுக்குச் சொந்தமான ராஜராஜ சோழன் மற்றும் அவரது பட்டத்து அரசியான உலகமாதேவியின் ஐம்பொன் சிலைகள் உள்ளிட்ட ஏராளமான சிலைகளை மீட்டார். 

இதனையடுத்து சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால்  சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு  தமிழக அரசு பிறப்பித்த ஆணையை எதிர்த்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தும்,  சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் மேலும் ஒரு ஆண்டுக்கு நீடிப்பார் எனவும் உத்தரவிட்டது. 

இந்நிலையில், சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்ததற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம்,பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டுள்ளது.