பொன், பொருள் சேர்க்கை இன்று யாருக்கு!

 

பொன், பொருள் சேர்க்கை இன்று யாருக்கு!

புதிய துறைகளில் முயற்சி  தேவை. சுபச்செய்திகள் கிடைக்கும்.பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும்.

இன்று 28-10-2019 திங்கட்கிழமை
நல்ல நேரம்
 காலை 6.15மணி முதல்7.15மணி வரை
மாலை4.45மணி முதல் 05.45மணி வரை
ராகு காலம் 
காலை 7.30மணி முதல் 09.00மணி வரை
எமகண்டம்
காலை 10.30மணி முதல்12.00மணி வரை 
சந்திராஷ்டமம்: ரேவதி.
பரிகாரம்: தயிர் . 
இன்று    :(கந்த ஷஷ்டி விழா ஆரம்பம்.)

மேஷம் 

தம்பதியரிடையே வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான இடமாற்றம் உண்டாகும். தொழிலில் இலாபம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அஸ்வினி : அன்பு 
பரணி : இடமாற்றம் 
கிருத்திகை : மகிழ்ச்சி 

ரிஷபம் 

போட்டிகளில் வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியங்களில் திட்டமிட்ட பணிகளை முழுமூச்சுடன் செய்து முடிப்பீர்கள்.  கடன் உதவிகள் கிடைக்கும். நிர்வாகம் சார்ந்த முடிவுகளில் நிதான ம் அவசியம். சுபவிரயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : ஜெயம் 
ரோகிணி : உதவி.
மிருகசீரிஷம் : சுபவிரயம் 

மிதுனம்

புதிய துறைகளில் முயற்சி  தேவை. சுபச்செய்திகள் கிடைக்கும்.பணியிடத்தில் செல்வாக்கு மேம்படும்.  பொது நலத்திற்கான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : சுபவிரயம் 
திருவாதிரை : கவனம் 
புனர்பூசம் : செல்வாக்கு 

கடகம் 
குடும்ப உறுப்பினர்களிடம் செல்வாக்கு உயரும். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் வந்தடையும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். . உடல் ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அயல்நாட்டு வேலைவாய்ப்புகளால் மகிழ்ச்சி ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
புனர்பூசம் : செல்வாக்கு 
பூசம் : வாய்ப்புகள் 
ஆயில்யம் : சிக்கல்கள் குறையும்.

சிம்மம் 

சுபிட்சம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கைக்கு முயற்சி செய்வீர்கள்.பணியிடங்களில் ஆதரவு அதிகரிக்கும். தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். தொலைதூர செய்திகளால் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : சுபிட்சம் 
பூரம் : ஆதரவு
உத்திரம் : அனுகூலம்

கன்னி 
தம்பதியரிடையே அன்னியோன்யம் கூடும் தொழிலில் திடீர் இலாபமும், ஆதரவும் கிடைக்கும். . பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கேளிக்கையில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தனித்திறமையால் இலாபம் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
சித்திரை : இலாபம் உண்டாகும்.

துலாம்
புதிய முயற்சிகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். தொழிலில் பொறுப்புகள் கூடும். புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். குடும்பத்தில் பொருளாதார மேன்மைக்கான சூழலை உருவாக்குவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : பொறுப்புகள் 
விசாகம் : ஆசிகள் 

விருச்சகம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களால் மனம் மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். சிந்தனையில் மாற்றம் உண்டாகும்.  விவாதங்களில் வெற்றி கிடைக்கும். தொழிலில் செல்வாக்கு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
விசாகம் : முன்னேற்றம் 
அனுஷம் : மாற்றம் 
கேட்டை : செல்வாக்கு 

தனுசு
உறவுகளின் ஆதரவு கிடைக்கும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் உண்டாகும். வழக்கு விவகாரங்களில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும். திறமைகளால் பொறுப்புகள் அதிகரிக்கும். சர்வதேச வணிகம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மூலம் : ஆதரவு 
பூராடம் : மகிழ்ச்சி 
உத்திராடம் : பொறுப்பு 

மகரம்
அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அமைதியுடன் நடந்து கொள்ளவும். மனதில் தேவையற்ற எண்ணங்களால் கவலைகள் உண்டாகும். சகோதரர்களிடத்தில் பொறுமை காக்கவும். எடுத்த பணிகளை செய்யும் விதத்தால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திராடம் : அமைதி 
திருவோணம் : கவலைகள் 
அவிட்டம் : கீர்த்தி 

கும்பம் 
தொழில் சார்ந்த முடிவுகளால் சாதகமான சூழல் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழிலுக்கு தேவையான புதிய உபகரணங்களை வாங்குவதற்கான உதவிகள் சாதகமாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : சாதகம் 
சதயம் : ஒத்துழைப்பு 
பூரட்டாதி : பொருட்சேர்க்கை 

மீனம் 
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகஸ்தரர்களுக்கு வீண் கவலைகள் தோன்றும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். கடன்காரர்களால் மனவருத்தங்கள் ஏற்படும். பணிபுரியும் இடங்களில் சக பணியாளர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி :  கவனம் 
உத்திரட்டாதி : நிதானம் 
ரேவதி : விமர்சனங்கள்