பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் காவல் நீட்டிப்பு…..காஷ்மீர் யூனியன் நிர்வாகம் அதிரடி

 

பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் காவல் நீட்டிப்பு…..காஷ்மீர் யூனியன் நிர்வாகம் அதிரடி

காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் காவலை, காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் பொது பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மேலும் நீட்டித்துள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், அந்த மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன் காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள், பிரபல அரசியல்வாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை போலீசார் வீட்டு காவலில் வைத்தனர்.

புதிய யூனியன் பிரதேசங்கள்

இருப்பினும், சில மாதங்கள் சென்ற நிலையில், நாங்கள் எந்தவித பிரச்சினையும் செய்யமாட்டோம் என எழுத்துப்புர்வமாக ஒப்புதல் கொடுத்த தலைவர்களை காஷ்மீர் நிர்வாகம் வீட்டு காவலிருந்து விடுவித்தது. அதேசமயம் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மெகபூபா முப்தி

இந்நிலையில், ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் நிர்வாகம், முன்னாள் முதல்வர்கள் ஓமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, என்.சி. பொது செயலாளர் அலி முகமது சாகர் மற்றும் பி.டி.பி. கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சர்தாஜ் மதானி ஆகியோரின் காவலை நீட்டிக்க பொது பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இதனால் மேலும் 3 மாதங்களுக்கு அவர்கள் காவலில் தொடர்ந்து இருப்பர். வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் அவர்களின் காவலை காஷ்மீர் நிர்வாகம் மேலும் நீட்டித்துள்ளது.