பொதுமக்களை வெறியுடன் லத்தியால் தாக்கும் போலீசார் – 144 தடை உத்தரவை துஷ்பிரயோகம் செய்யும் அவலம்

 

பொதுமக்களை வெறியுடன் லத்தியால் தாக்கும் போலீசார் – 144 தடை உத்தரவை துஷ்பிரயோகம் செய்யும் அவலம்

இருசக்கர வாகனங்களில் வெளியில் வருவோரை போலீசார் வெறியுடன் துரத்தி, துரத்தி லத்தியால் தாக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளன.

சென்னை: இருசக்கர வாகனங்களில் வெளியில் வருவோரை போலீசார் வெறியுடன் துரத்தி, துரத்தி லத்தியால் தாக்கும் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிகரித்துள்ளன.

சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இருசக்கர வாகனங்களில் வெளியில் வருவோரை போலீசார் லத்திக் கம்பால் தாக்குவது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் பணிமுடித்து விட்டு வந்த அரசு டாக்டர் ஒருவரை எஸ்.ஐ ஒருவர் லத்திக்கம்பால் தாக்குவது வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொதுமக்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுகின்றனர். உண்மையான அத்தியாவசிய தேவைக்கு குடும்பத்தில் ஓரிருவர் வெளியில் வரலாம் என அரசு அறிவுறுத்தி இருப்பதை போலீசார் கவனத்தில் கொள்வதில்லை.

ttn

144 தடை உத்தரவு என்ற அதிகாரத்தை பயன்படுத்தி போலீசார் பொதுமக்களை வெறியோடு தாக்கும் சம்பவங்களுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன சோதனையின்போது லத்தியை கையில் வைத்திருக்கக் கூடாது என்றும் பொதுமக்களிடம் கனிவாக நடக்க வேண்டும் என்றும் சென்னை பூக்கடை துணைக் கமிஷனர் ராஜேந்திரன் நேற்று போலீஸ் மைக் மூலம் வாக்கி டாக்கியில் அறிவுரைகள் கூறினார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் “வாகன சோதனையில் ஈடுபடும் காவலர், எஸ்.ஐ, இன்ஸ்பெக்டர் யாரும் கையில் லத்திக்கம்பு வைத்திருத்தல் கூடாது. பொதுமக்களை அடிக்கக் கூடாது. காவல்துறையின் நோக்கம் குற்றவியல் நடைமுறைச்சட்டமான 144 தடை உத்தரவின் விதிகளை எந்த அளவுக்கு மக்களுக்கு புரிய வைப்பதே ஆகும். அதை விட்டு பொதுமக்களை துன்புறுத்துவதோ, அவர்களை அடிப்பதோ வேண்டாம்” இவ்வாறு ராஜேந்திரன் வாக்கி டாக்கியில் போலீசாருக்கு அறிவுரைகள் கூறினார்.