பொதுமக்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்களுக்கு குறைந்த விலையில் அரிசி!

 

பொதுமக்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்களுக்கு குறைந்த விலையில் அரிசி!

ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களுக்கு தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர். அவர்களை முகக்கவசம், சானிடைசர்கள் போட்டுக்கொண்டு செல்லுமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. 

ttn

இந்நிலையில் பொது மக்களுக்கு உணவு வழங்க விரும்புபவர்கள் குறைந்த விலையில் அரிசி வாங்கி கொள்ளலாம் என இந்திய உணவு கழகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் தமிழ் நாட்டுக்கு மாதத்துக்கு மூன்று 1.87 லட்சம் டன் அரிசி கொடுக்கப்படும் என்றும்  ஒவ்வொரு மாதமும் 3 லட்சம் டன் அரிசி வழங்கப்பட்டு வருவதாகவும் இந்திய உணவு கழக தென்மண்டல செயல் இயக்குனர் நசீம் கூறியுள்ளார். மேலும், மக்களுக்கு உணவு வழங்க விரும்புபவர்கள் உணவு கழகம் மூலம் நேரடியாக அரிசி பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.