பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டம் செய்வது நியாயமற்றது: அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி!

 

பொதுத்தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் போராட்டம் செய்வது நியாயமற்றது: அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தி!

பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் செய்வது நியாயமற்றது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் 

கோவை: பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் செய்வது நியாயமற்றது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்து ஜாக்டோ- ஜியோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தையே அமல்படுத்திட வேண்டும். சிறப்புக் காலமுறை மற்றும் தொகுப்பு, மதிப்பு ஊதியங்களை ஒழித்து வரையறுக்கப்பட்ட ஊதியம் வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைந்து 7-வது ஊதிய குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ‘தமிழக அரசு மற்றும் உயர்நீதிமன்றம் அறிவுரையின்படி மாணவர்கள் நலனுக்காக ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் பொதுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராட்டம் செய்வது  நியாயமற்றது’ என்றார்.