பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 10% போனஸ் – தமிழக அரசு அதிரடி!! 

 

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு 10% போனஸ் – தமிழக அரசு அதிரடி!! 

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான தீபாவளி பண்டிக்கைக்கான போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கான தீபாவளி பண்டிக்கைக்கான போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி போனஸ் பெற உச்சவரம்பு என்பது ரூ. 21 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் குரூப் சி-டி ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டுக்கான 8.33 சதவிகித போனசும் மற்றும் ஊக்கத்தொகை 1.67 சதவீதம் என மொத்தம் 10 சதவீதம் வழங்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளது. 

போனஸ்

இந்த பொதுத்துறை நிறுவனங்களில் போக்குவரத்து, நிர்வாகம், மின்வாரியம், தமிழ்நாடு வனத்தோட்ட கார்ப்பரேஷன், தமிழ்நாடு தேயிலை கார்ப்பரேஷன் மற்றும் அரசு ரப்பர் கார்ப்பரேஷன் ஆகிய துறை இடம்பெறாது. அவர்களுக்கு தனியே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.