பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய 57 பேர்களின் பெயர், முகவரி அடங்கிய பேனர் வைத்தது மிகப்பெரிய அநியாயம்…… உ.பி. அரசை கண்டித்த அலகாபாத் நீதிமன்றம்

 

பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய 57 பேர்களின் பெயர், முகவரி அடங்கிய பேனர் வைத்தது மிகப்பெரிய அநியாயம்…… உ.பி. அரசை கண்டித்த அலகாபாத் நீதிமன்றம்

உத்தர பிரதேசத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய 57 பேர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட அடங்கிய பேனர்களை வைத்தது பெரிய அநியாயம் என அம்மாநில அரசை அலகாபாத் உயர் நீதிமன்றம் கடிந்துள்ளது.

[16:36, 3/8/2020] Gps: உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் வன்முறையில் முடிவடைந்தது. கலவரகாரர்கள் நடத்திய கோர தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டனர் மேலும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்தது. இதனையடுத்து போலீசார் எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் அங்கு அமைதி திரும்பியது.

லக்னோ கலவரம்

பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களிடம் அதற்கான இழப்பீடு பெறப்படும். இல்லையென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்து இருந்தார். இந்நிலையில் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளின் படம், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்களை லக்னோவின் பல்வேறு முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டது. மேலும் அந்த பேனரில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு இவர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதில் குறிப்பிடபட்டு இருந்தது.

கலவரகாரர்கள் மீது போலீசார் நடவடிக்கை

அந்த பேனர்களில் இடம்பெற்றுள்ள பொது சொத்துக்களில் சேதம் விளைவித்த குற்றவாளிகளில் பட்டியலில் ஷியா மதகுரு மவுலானா சைப் அப்பாஸ், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி தாராபுரி மற்றும் தலைவர் சதாப் ஜாபர் உள்ளிட்டோரும் உள்ளனர்.  இந்த பேனர் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பேனர் விவகாரம் தொடர்பாக அலகபாத் உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது. இந்த தொடர்பான விசாரணை ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெறும் அறிவிக்கப்பட்டு இருந்தது. 

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்

அதன்படி நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கோவிந்த மாத்தூர்  மற்றும் நீதிபதி ரமேஷ் சின்ஹா அடங்கிய அமர்வு பேனர் விவகாரத்தை விசாரித்தது. அப்போது நீதிமன்றம்  மாநில அரசின் பேனர் நடவடிக்கை பெரிய அநியாயம். மேலும் இது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான முழுமையாக ஆக்கிரமிப்பு. மாநிலத்தில் நல்லெண்ணம் மேலோங்க வேண்டும். அந்த பேனர்களை அகற்றி பிற்பகல் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.