பொங்கல் போல இனி கிடைக்குமா… சோகத்தில் பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்!

 

பொங்கல் போல இனி கிடைக்குமா… சோகத்தில் பணிக்குத் திரும்பிய அரசு ஊழியர்கள்!

பொங்கல் விடுமுறை போன்று இந்த ஆண்டு இனி நீண்ட விடுமுறை கிடைக்காது என்ற சோகத்தில் இன்றைக்கு பல அரசு பணியாளர்களும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

பொங்கல் விடுமுறை போன்று இந்த ஆண்டு இனி நீண்ட விடுமுறை கிடைக்காது என்ற சோகத்தில் இன்றைக்கு பல அரசு பணியாளர்களும் வேலைக்குத் திரும்பியுள்ளனர்.

govt

பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 11ம் தேதி முதல் 19ம் தேதி வரை அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இரண்டு சனி, ஞாயிறு, பொங்கல் விடுமுறை மூன்று நாள், அரசு அளித்த கூடுதல் விடுமுறை இரண்டு நாள் என ஒன்பது நாட்கள் ஒரு நீண்ட விடுப்பிலிருந்து இன்று அரசுப் பணியாளர்கள் பலர் பணிக்குத் திரும்பினர்.

govt office

இந்த ஆண்டு நிறைய அரசு விடுமுறை நாட்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. குடியரசு தினம் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அடுத்து மார்ச் மாதம் தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி என அடுத்தடுத்து அரசு முறை நாட்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே வருகின்றன. பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலேயே வருகின்றன. 

travel

பொதுவாக திங்கள், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அரசு விடுமுறை தினம் வந்தால், தொடர்ந்து நான்கு, ஐந்து நாட்களுக்கு லீவ் எடுத்துக்கொண்டு வெளியூர் செல்வது பலரின் வாடிக்கையாக உள்ளது. இந்த ஆண்டு பண்டிகை மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எல்லாம் வார இறுதி நாட்களிலேயே வருவதால் நீண்ட லீவ் எடுக்க முடியாதே என்ற சோகம் அரசு ஊழியர்களைக் கவ்விக்கொண்டது. இருப்பினும் மே ௧, சித்திரை தமிழ் புத்தாண்டு எல்லாம் வார நாட்களில் வருவது அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலைத் தந்துள்ளது.