பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் !

 

பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம் !

12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது.

பொங்கல் பண்டிகைக்காக வெளியே தங்கி வேலை பார்க்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். பொங்கல் பண்டிகையின் போது சூரிய வழிபாடு, மஞ்சு விரட்டு என அனைத்து கிராமங்களிலும் ஆரவாரமாக இருக்கும். மக்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை 30,120 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை தெரிவித்திருந்தது. அதில் சென்னையில் இருந்து மட்டுமே 16,075 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்றும் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

ttn

சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கும் என்று முன்னேரே அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், இன்று தொடங்கியுள்ளது. இதற்காக 17 முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 1 மையமும், பூந்தமல்லியில் 1 மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தொடங்கி வைத்தார்.