பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம் : இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது!

 

பொங்கலுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம் : இன்று தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது!

பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து போனது பயணிகள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. 

சென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவுகள், தொடங்கிய சில நிமிடங்களில் முடிந்து போனது பயணிகள் பலருக்கும் ஏமாற்றத்தை அளித்தது. 

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் பணிபுரிபவர்கள் பொங்கலுக்கு ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால் சென்னை பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழியும். அதேசமயம் இதுபோன்ற நாட்களில் சென்னை வெறிச்சோடி காணப்படும். 

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. அதன்படி ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் பயணத்திற்கான முன்பதிவு இன்று தொடங்கிய சில நிமிடத்திற்குள்  முடிந்தது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

2020 பொங்கல் பண்டிகைக்கான (ஜனவரி 15) ரயில் டிக்கெட் முன்பதிவு விவரம்:

ஜன.10ம் தேதிக்கான முன்பதிவு: செப்டம்பர் 12 (இன்று)
ஜன.11ம் தேதிக்கான முன்பதிவு: செப். 13
ஜன.12ம் தேதிக்கான முன்பதிவு: செப். 14
ஜன.13ம் தேதிக்கான முன்பதிவு: செப். 15
ஜன.14ம் தேதிக்கான முன்பதிவு: செப். 16

பொங்கல் பண்டிகை கொண்டாடிவிட்டு சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குத் திரும்ப வசதியாக ஜனவரி 19ஆம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 21ஆம் தேதியும்,  ஜனவரி 20ஆம் தேதிக்கான முன்பதிவு வரும் 22ஆம் தேதியும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.