பைக் தராத பெண் வீட்டார்: திருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்!

 

பைக் தராத பெண்  வீட்டார்: திருமணமான 24 மணி நேரத்தில் முத்தலாக் சொன்ன கணவர்!

திருமணத்திற்காகப் பெண் வீட்டார் வரதட்சணையாக  ஷாஹே ஆலமிற்கு இருசக்கர வாகனத்தை தருவதாகக் கூறியுள்ளனர்.

உத்தரப்பிரதேசம்: வரதட்சணையாக இருசக்கர வாகனம் கொடுக்காததால் திருமணமான 24 மணி நேரத்தில் இளம் பெண்ணிற்கு ஒருவர் முத்தலாக் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Muslim

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாகன்ஹிராபாத் பகுதியைச் சேர்ந்த  ஷாஹே ஆலம் என்பவருக்கும் ருக்சனா பனோ என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஜூலை 13 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்காகப் பெண் வீட்டார் வரதட்சணையாக  ஷாஹே ஆலமிற்கு இருசக்கர வாகனத்தை தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால்  கூறியபடி அவர்களால் தாய் தரமுடியாமல் போயுள்ளது. 

dowry

இதனால் ஆத்திரமடைந்த  ஷாஹே ஆலம் திருமணமான 24 மணிநேரத்தில் மனைவிக்கு முத்தலாக் கூறி விவாகரத்து அளித்துள்ளார். இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பெண் வீட்டார் காவல்நிலையத்தில்  தந்தை வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர்.  இந்த வழக்கு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வரதட்சணைக்காகத் திருமணமான  24 மணி நேரத்தில் முத்தலாக் அளித்திருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.