பேஸ்புக்கை பயன்படுத்தாத பயனர்களும் இனி மொபைலில் பேஸ்புக் லைவ் அம்சத்தை அணுகலாம்

 

பேஸ்புக்கை பயன்படுத்தாத பயனர்களும் இனி மொபைலில் பேஸ்புக் லைவ் அம்சத்தை அணுகலாம்

பேஸ்புக்கை பயன்படுத்தாத பயனர்களும் இனி மொபைலில் பேஸ்புக் லைவ் அம்சத்தை அணுகலாம்.

டெல்லி: பேஸ்புக்கை பயன்படுத்தாத பயனர்களும் இனி மொபைலில் பேஸ்புக் லைவ் அம்சத்தை அணுகலாம்.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நேரடி வீடியோவுக்கான தேவை அதிகரிக்கும்போது, ​ பயனர்கள் அல்லாதவர்களையும் மொபைல் சாதனங்களிலிருந்து நேரடி ஸ்ட்ரீம்களைப் பார்க்க ​பேஸ்புக் அனுமதிக்கிறது. இந்த வசதி முன்னர் டெஸ்க்டாப்பில் மட்டுமே கிடைத்தது. மேலும் இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு பயனர்களுக்குக் கிடைக்கிறது. வரவிருக்கும் வாரங்களில் ஐ.ஓ.எஸ் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அதாவது ‘பப்ளிக் ஸ்விட்ச் டெலிபோன் நெட்வொர்க்’ போன்ற புதிய விருப்பங்களை பேஸ்புக் சேர்க்கிறது. இது மக்கள் கட்டணமில்லா எண் வழியாக லைவ் ஸ்ட்ரீமில் கேட்க அனுமதிக்கும். பேஸ்புக் லைவ் “ஆடியோ மட்டும்” என்ற முறையிலும் செயல்படுகிறது.

ttn

கோடிக்கணக்கான மக்கள் வீட்டிலேயே இருப்பதால் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிக,மிக அதிகளவில் அதிகரித்துள்ளது.  எழுபது சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் குரூப் வீடியோ கால் அம்சங்களை பயன்படுத்துகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் விளைவாக பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் பதிடப்படும் லைவ் வீடியோக்களை பார்ப்பதில் மக்கள் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். மிக அதிகமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் வீடியோ தரத்தை குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.