பேஸ்புக்கால் காலியான Passbook -வெளிநாட்டு ஆசையில் உள்நாட்டில் கடன்காரியானார் -ஐந்து லட்சம் இழந்த ஐ.டி இன்ஜினீயர் 

பேஸ்புக்கால் காலியான Passbook -வெளிநாட்டு ஆசையில் உள்நாட்டில் கடன்காரியானார் -ஐந்து லட்சம் இழந்த ஐ.டி இன்ஜினீயர் 

நாக்பூரில் உள்ள ஒரு பெண் ஐ .டி .இன்ஜினீயரிடம் Facebook மூலம் பழகிய ஒரு நபர் அவரை கல்யாணம் செய்துகொண்டு ஜெர்மன் கூட்டி செல்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி நூதனமான முறையில் ஐந்து லட்சத்தை ஆட்டைய போட்ட அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

fake-man

நாக்பூரில் அஜ்ஜினியில், காஷிநகரில் வசிக்கும் ஒரு இளம் பெண் என்ஜினீரியரிடம் Facebook மூலம் ஒரு நபர் தான் ஜெர்மனில் வசிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்வதாகவும், ஜெர்மனியில் செட்டில் ஆகலாமெனவும் ஆசை வார்த்தைகள் கூறி சில மாதங்களாக பேஸ்புக்கில் Chat செய்து வந்தார்.
சென்ற மாதம் அந்த காதலன் அந்த பெண்ணிடம் உனக்கு ஒரு பார்சல் பரிசாக ஜெர்மனியிலிருந்து அனுப்பி இருக்கிறேன் அதை பெற்றுக்கொள் என்று கூறினார். சில நாள் கழித்து அப்பெண்ணுக்கு டெல்லி கஸ்டம்ஸ் அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் அந்த பெண்ணிடம் பேசி, உங்களுக்கு ஒரு பார்சல் வந்திருக்கிறது அதற்கு ‘டூட்டி’யாக 5.15 லட்சம் கட்டவேண்டுமென கூறி ஒரு அக்கௌண்டுக்கு பணம் அனுப்ப சொல்லியிருக்கிறார்.
இதை நம்பிய அந்த பெண் அவர் சொன்ன கணக்குக்கு கடன் வாங்கி 5.15 லட்சத்தை அனுப்பினார். ஆனால் எந்த பார்சலும் இது வரை வராததாலும், மேலும் தனது Facebook காதலன் அதற்கு பிறகு பேசாததாலும், கடன் காரர்கள் நெருக்குவதாலும் அதிர்ச்சி அடைந்த பெண் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அருகில் உள்ள அஜினி காவல் நிலையத்தில் புகார் தந்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.