பேரிடரை வெல்வோம் என்ற நம்பிக்கையை அளித்த உரையாடல்! – ஸ்டாலின் ட்வீட்

பேரிடரை வெல்வோம் என்ற நம்பிக்கையை அளித்த உரையாடல்! – ஸ்டாலின் ட்வீட்

கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட நல்லோர் கூட தன்னார்வலர்களுடன் பேசியது பேரிடரை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அளித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவித் தேவைப்படுபவர்களுக்கு உதவ உருவாக்கப்பட்ட நல்லோர் கூட தன்னார்வலர்களுடன் பேசியது பேரிடரை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அளித்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஒன்றினைவோம் வா திட்டத்தை தொடங்கியதிலிருந்து, மாநிலம் முழுவதும் இருந்து பலரும் தன்னார்வலர்களாக செயல்பட தொடர்புகொண்டனர். இதைத் தொடர்ந்து நல்லோர் கூடம் என்ற மெய்நிகர் மன்றம் ஒன்று தொடங்கப்பட்டு அதன் மூலமாக உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நல்ல முயற்சியில் தனிநபர்கள் ondrinaivomvaa.in/nallorkoodam என்ற இணைய முகவரி மூலமாக தங்களை இணைத்துக்கொண்டு தங்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு எப்படி உதவுவது என்று தெரிந்துகொள்ளலாம். 

நேற்று இந்த நல்லோர் கூடத்தில் இணைந்த தன்னார்வலர் குழுவினருடன் பேசினேன். அவர்களின் இரக்க சிந்தனையும் நம்பிக்கையும் பேரிடரை நாம் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கை அளித்தது. இந்த உதவி தேவைப்படும் நேரத்தில் ஒருவரையும் விட்டுவிடாமல் இருப்பதை உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.