பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி!

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்த மனு தள்ளுபடி; உச்ச நீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

புதுதில்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம். அவர்களது விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அனைத்து அதிகாரமும் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

rajiv murders

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் நிறைவற்றப்பட்ட சிறப்புத் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல், அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

அதையடுத்து, தமிழக அமைச்சரவை கூடி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய ஆணையிடும்படி ஆளுனருக்கு பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றியது. அதன் மீது ஆளுநர் மாளிகை இந்நேரம் முடிவெடுத்து 7 தமிழர்களையும்  விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் மாளிகை தாமதித்து வருகிறது.

இதனிடையே, ஏழு பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமெரிக்கை நாராயணன், ராம சுகந்தன் மற்றும் அவர்களுடன் இணைந்து குண்டுவெடிப்பில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக ஆளுநரின் பரிசீலனையில் இந்த வழக்கு உள்ளதால் விடுதலை குறித்து அவரே முடிவு எடுப்பார் என கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்த அந்த மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.