பேரனின் பிறந்தநாளுக்கு 45 நாட்களில் நீச்சல் குளத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்

 

பேரனின் பிறந்தநாளுக்கு 45 நாட்களில் நீச்சல் குளத்தை உருவாக்கிய தயாரிப்பாளர்

பேரன் கேட்டதும் 45 நாட்களில் அழகிய நீச்சல் குளத்தை தயார் செய்து, அவன் விரும்பியபடி பிறந்தநாளன்று பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தனது பேரனுக்கு நீச்சல் குளத்தை பரிசளித்துள்ளார்.

அல்லு அர்ஜுன்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் சினேகா ரெட்டி தம்பதிக்கு கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி அல்லு அயான் பிறந்தார். அதையொட்டி இன்று (ஏப்ரல் 3) அல்லு அர்ஜுன் வீட்டில், அல்லு அயானின் பிறந்தநாள் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

அல்லு

அல்லு அயானின் பிறந்தநாளையொட்டி அவருக்கு என்ன வேண்டும் என அவரது தாத்தாவும், அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் முன்பே கேட்டுள்ளார். அதற்கு நீச்சல் குளம் வேண்டும் என அல்லு அயான் கேட்டிருக்கிறார். பேரன் கேட்டதும் 45 நாட்களில் அழகிய நீச்சல் குளத்தை தயார் செய்து, அவன் விரும்பியபடி பிறந்தநாளன்று பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.