பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை : அன்புமணி பேட்டி..

 

பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை : அன்புமணி பேட்டி..

பேனர் வைப்பது தேவையற்ற செயல், பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.மா.க இளைஞரணி தலைவர் அன்புமணி, சீன அதிபர் மற்றும் இந்தியப் பிரதமர் வருகைக்காக பேனர்கள் வைப்பதைத் தமிழக அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் பேனர் வைக்கும் கலாச்சாரம் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றும் கூறியுள்ளார். 

Anbumani ramadoss

அதனைத் தொடர்ந்து, பேனர் வைப்பது தேவையற்ற செயல், பேனர் வைக்கும் கலாச்சாரத்தை அறவே ஒழிக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்தியாவில் காலநிலை மாற்றம் குறித்து அவசர பிரகடனம் செய்யக் கோரி மோடியை அவர் சந்திக்க இருப்பதாகவும், நீட் தேர்வில் தொடர்ந்து நடந்து வரும் ஆள் மாறாட்டத்தால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.