பேண்ட்டின் கயிற்றைக்கூட கட்ட தெரியாத பெண் கழுத்தை இறுக்கி கொண்டுள்ளது வேதனை…. தமிழகத்தை நம்பி தான அனுப்பினோம்- பாத்திமா லத்தீஃப் தாய் கண்ணீர்!! 

 

பேண்ட்டின் கயிற்றைக்கூட கட்ட தெரியாத பெண் கழுத்தை இறுக்கி கொண்டுள்ளது வேதனை…. தமிழகத்தை நம்பி தான அனுப்பினோம்- பாத்திமா லத்தீஃப் தாய் கண்ணீர்!! 

முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே… என பாத்திமா லத்தீஃப் தாயார் தெரிவித்துள்ளார். 

முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டதே… என பாத்திமா லத்தீஃப் தாயார் தெரிவித்துள்ளார். 

சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த  ஃபாத்திமா லத்தீஃப் எனும் முதலாமாண்டு மாணவி பேராசிரியளின் உளவியல் தாக்குதலால் மனமுடைந்து சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை குறித்தான விசாரணையில், ஃபாத்திமா லத்தீஃப், தனது துறையைச் சார்ந்த மூன்று பேராசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு,  தான் இறந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு அவருடனான உரையாடல்கள் மூலம் மதத்தை வைத்து ஆசிரியர்களால் நிந்தனைக்குள்ளாவதாக தனது குடும்பத்தினருக்கு தெரிவித்திருக்கிறார் ஃபாத்திமா. மாணவியின் தற்கொலைக்கான காரணம் தெரியாத நிலையில், ஃபாத்திமாவின் செல்போன் பதிவு முக்கிய தடயமாக கருதப்படுகிறது.

Fathima

இந்நிலையில் மாணவி ஃபாத்திமாவின் தாய், “பொதுவாக நாங்கள் பெண் பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி வைக்க வைக்கமாட்டோம். காரணம் பயன். முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம். அதனால்தான் முக்காடு போடாதே என கூறி அனுப்பினோம். ஆனால் நாங்கள் என்ன செய்ய பெயர் ஃபாத்திமா லத்தீஃப் ஆகிவிட்டது. 

ஐஐடியில் என் மகளுக்கு தொல்லைகள் தரப்பட்டுள்ளது. இண்டெர்னல் மதிப்பெண் குறைவாக போட்டதால் பேராசிரியர்களிடம் என் மகள் வாதிட்டுள்ளார். அப்போதிலிருந்தே என் மகள் மீது பேராசிரியர்கள் கோவமாக இருந்துள்ளனர்.  படிப்பில் ஆர்வமாக இருந்ததால் தமிழகத்தை நம்பிதான் படிக்க அனுப்பினோம். எனது மகளுக்கு தெரிந்த விஷயமெல்லாம் வகுப்பறை, விடுதி, நூலகம், மற்றும் உணவகம் மட்டும்தான். இதைத்தவிர வேறெங்கும் அவள் சென்றதில்லை. பேராசியர் சுதர்சன் பத்மநாபனின் தொல்லைகள் தாங்காமல் தான் அவள் இறந்துபோயிருக்கிறாள். அவளுக்கு இன்று சுடிதார் பேண்ட்டின் கயிற்றை கட்ட தெரியாது. இறுக்கமாக கட்டினால் வலிக்கும் என்பால் ஆனால் இன்று அவளது கழுத்தை நெருக்கமாக இறுக்கி தூக்கிக்கிட்டு கொண்டுள்ளாள் என்றால் எவ்வளவு வலி நிறைந்திருந்திருக்கும்” என உருக்கமாக தெரிவித்துள்ளார்.