பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.க-வில் இணைந்தார்

 

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பா.ஜ.க-வில் இணைந்தார்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

டெல்லி: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவர் பா.ஜ.க தேசிய செயலாளர் அருண்சிங் முன்னணியில் கட்சியில் இணைந்தார். மேலும் பா.ஜ.க மூத்த தலைவர்கள் சிலர் உடனிருந்தனர். சாய்னாவுக்கு பூங்கொத்து கொடுத்து பா.ஜ.கவினர் வரவேற்றனர்.

இந்திய பேட்மிண்டன் விளையாட்டு துறையில் பிரபலமாக இருக்கும் சாய்னா இதுவரை 24 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறார். ஹரியானாவை சேர்ந்த இவர் லண்டனில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஒலிம்பிக் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். முன்னதாக ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் ஆகியோர் பா.ஜ.க-வில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.