பேட்ட vs விஸ்வாசம்: துருவ் விக்ரமின் சாய்ஸ் எது தெரியுமா?

 

பேட்ட vs விஸ்வாசம்: துருவ் விக்ரமின் சாய்ஸ் எது தெரியுமா?

விஸ்வாசம்- பேட்ட திரைப்படங்களில் முதலில் எதை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிரடியாக பதில் கூறியுள்ளார் துருவ் விக்ரம்

சென்னை: விஸ்வாசம்பேட்ட திரைப்படங்களில் முதலில் எதை பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிரடியாக பதில் கூறியுள்ளார் துருவ் விக்ரம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமின் மகன் துருவ் விக்ரம், பாலா இயக்கத்தில் உருவாகி வரும்வர்மாதிரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தஅர்ஜுன் ரெட்டிதிரைபடத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகவர்மாதிரைப்படம் உருவாகியுள்ளதுஇப்படத்தின் டிரைலர் வரும் ஜன.9ம் தேதி நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடவுள்ளதாகப் கூறப்பட்டுள்ளது

அதையடுத்து வர்மா திரைப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

petta

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், இந்த பொங்கலுக்கு வெளியாகிற பேட்டவிஸ்வாசம் திரைப்படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று கேள்வி முன்வைக்க, அதற்கு யோசிக்காமல் முதலில் பேட்ட திரைப்படம் தான் பார்ப்பேன், மேலும் அதற்காக காத்துகொண்டு இருப்பதாக கூறினார்.