பேட்ட Vs விஸ்வாசம்: எந்த படம் முதலில் ரிலீஸ்? வெளியான முக்கிய தகவல்

 

பேட்ட Vs விஸ்வாசம்: எந்த படம் முதலில் ரிலீஸ்? வெளியான முக்கிய தகவல்

பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படும் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: பொங்கலுக்கு வெளியாக இருப்பதாக கூறப்படும் பேட்ட திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம், பொங்கல் அன்று திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் விஸ்வாசம் படத்தை வெளியிட இருக்கும் விநியோகஸ்தர்களின் பட்டியலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, படத்தின் பாடல்களை வெளியிட்டிருக்கும் படக்குழு, ஜனவரி 1ம் தேதி மாலை படத்தின் டீசரை வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.

petta rajini

இந்நிலையில், பொங்கலுக்கு முன்னதாகவே, 10ம் தேதி அல்லது 11ம் தேதியே பேட்ட படத்தை வெளியிடுவது தொடர்பாக படக்குழு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

10ம் தேதி வியாழக்கிழமை என்பதால் விடுமுறை நாட்களைக் கணக்கில் கொண்டு படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும், இத்தகவல் பேட்ட படத்தின் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்ற விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து வெளியாகியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.