பேட்ட: ரஜினியின் ‘இளமை திரும்புதே’ : கொண்டாடும் ரசிகர்கள்!

 

பேட்ட: ரஜினியின் ‘இளமை திரும்புதே’ : கொண்டாடும் ரசிகர்கள்!

பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சென்னை: பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

சன் பிக்சர் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் பேட்ட திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் நடிகர் விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், த்ரிஷா, நவாசுதீன் சித்திக்  உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்ததுடன் சர்வதேச அளவில்  வசூல் சாதனை படைத்தது.

rajini

இப்படத்தின் மூலம் ரஜினியுடன் முதன்முதலாக இணைந்த அனிருத்,  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் கொஞ்சமும் குறையாமல் மாஸ், கிளாஸ், ரொமான்ஸ் என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் ‘இளமை திரும்புதே’ பாடல் வீடியோவை சோனி மியூசிக் நிறுவனம் தனது  யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. முன்னதாக ’உல்லால்லா’ பாடல் வெளியாகி  இதுவரை 1.6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்தது  குறிப்பிடத்தக்கது.