பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவின் போது திருமணம் செய்த தம்பதிக்கு ரஜினி வாழ்த்து

 

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவின் போது திருமணம் செய்த தம்பதிக்கு ரஜினி வாழ்த்து

சென்னை: பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவின் போது திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட தம்பதியை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தினார்.

தமிழ் சினிமா ரசிகர்கள் தங்கள் விருப்பமான நாயகர்களை பெரிதும் கொண்டாடக் கூடியவர்கள். பாலாபிஷேகம், மொட்டை அடிப்பது என தங்கள் நாயகனுக்காக எதையும் செய்யும் ரசிகர்கள் இங்கே ஏராளம். இதுபோன்ற செயல்களை செய்ய வேண்டாம் என முன்னணி நடிகர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். ரஜினியும் தன் ரசிகர்கள் நலனை மனதில் கொண்டு சில விஷயங்களை தவிர்க்கும்படி கூறியிருக்கிறார். இந்நிலையில் ஒரு ரசிகர் வித்தியாசமாக ரஜினியின் பேட்ட வெளியீடு அன்று திருமணம் செய்துள்ளார். 

பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவின் போது, உட்லண்ட்ஸ் திரையரங்கில் திருமணம் செய்து கொண்ட அந்த தம்பதியை நேரில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.