பேட்ட அப்டேட்: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் அடுத்த பிரபலம்!

 

பேட்ட அப்டேட்: சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணையும் அடுத்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல இயக்குநர் மகேந்திரன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘பேட்ட’ படத்தில் பிரபல இயக்குநர் மகேந்திரன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தில் நடிக்கும் நடிகர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. ஏற்கனவே, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, சோமசுந்தரம், மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ளது.

இந்நிலையில்  முள்ளும்  மலரும், உதிரி பூக்கள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மகேந்திரன் இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கவுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவர் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே மகேந்திரன் விஜயுடன் தெறி  படத்தில் நடித்திருந்த நிலையில் தற்போது அவர்  ரஜினியுடன் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.