பேச்சுவார்த்தை நடத்தினால் இனி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்துதான்… ராஜ்நாத் சிங்கின் அடுத்த குண்டு….

 

பேச்சுவார்த்தை நடத்தினால் இனி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்துதான்… ராஜ்நாத் சிங்கின் அடுத்த குண்டு….

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் (பி.ஓ.கே.) குறித்துதான் இருக்கும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

அரியானாவில் இன்று பா.ஜ.வின் ஜன் ஆசிர்வாத் யாத்திரையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: ஜம்மு அண்டு காஷ்மீரின் மேம்பாட்டுக்காகதான் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. நமது அண்டைநாடு சர்வதேச சமூகத்தின் கதவுகளை தட்டி இந்தியா தவறு செய்து விட்டதாக கூறியது. 

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை. அந்த பேச்சுவார்த்தையும் தற்போது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்துதான் இருக்கும். பாலகோட் தாக்குதலை காட்டிலும் பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிடுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் பிரதமர் கூறினார். அப்படின்னா பாலகோட்டில் இந்தியா செய்ததை பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார் என்பதே அதற்கு அர்த்தம். இவ்வாறு அவர் கூறினார்.

பாலகோட் தாக்குதல்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்நாத் சிங், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்து  இல்லை என்ற கொள்கையில் இந்தியா இப்போது வரை உறுதியாக உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து கொள்கையில் மாற்றம் ஏற்படலாம் என பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில், இனி பேச்சுவார்த்தை நடத்தினால், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் குறித்துதான் இனி பேசுவோம் என ராஜ்நாத் சிங் கூறியிருப்பது பாகிஸ்தானுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.