பேச்சிலர் வாழ்க்கையில் இது மாதிரியான சட்னி உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும்!

 

பேச்சிலர் வாழ்க்கையில் இது மாதிரியான சட்னி உங்களுக்கு ரொம்ப ஹெல்ப் பண்ணும்!

சம்மர் லீவு ஸ்டார்ட் ஆகிடுச்சு.தகிக்கும் வெய்யயிலிருந்து தப்பிக்க பலர் சொந்த ஊர்களுக்கு போயிருப்பார்கள்.சிலர் ஜில்லென்ற மலை பிரதேசத்துக்கு டூர் போயிருக்கலாம்.

சம்மர் லீவு ஸ்டார்ட் ஆகிடுச்சு.தகிக்கும் வெய்யயிலிருந்து தப்பிக்க பலர் சொந்த ஊர்களுக்கு போயிருப்பார்கள்.சிலர் ஜில்லென்ற மலை பிரதேசத்துக்கு டூர் போயிருக்கலாம். அவங்களுக்கென்ன ஜாலியா போயிட்டாங்க நாம அப்படி போக முடியுமா என்று வேலை காரணமாக வெளியில் போகாத ஆண்கள் இரண்டு மாதத்திற்கு பேச்சிலர் வாழ்க்கைதான். வீட்டில் ஆள் இலலை என்பதற்காக அடிக்கடி வெளியில் சாப்பிட்டு உடலை கெடுத்துக்க வேண்டாம்.

gooseberry

ஒரு நேரமாவது வீட்டில் சாப்பிடுங்கள்.அந்த மாதிரியான நேரத்தில் இது போல் சட்டினி உங்களுக்கு இந்த நெல்லிக்காய் சட்னி உதவும். இதை பேச்சிலருக்கு மட்டும்தான் என்றில்லை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் சாப்பிட கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் 

உ .பருப்பு – அரை கரண்டி 
கடலைப் பருப்பு – அரை கரண்டி 
மிளகாய் வற்றல் – நான்கு 
நெல்லிக்காய் -ஆறு 
பெருங்காயம் – சிறுதுண்டு 
தேங்காய் – பாதி மூடி 
உப்பு – தேவையான அளவு 

gooseberry

செய்முறை 

நெல்லிக்காயை நன்றாகக் கழுவி,கொட்டையை எடுக்க வேண்டும். பிறகு மிளகாய் வற்றல், கடலை பருப்பு,உ .பருப்பு,பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து வைத்து கொள்ளவும். 

நெல்லிக்காய் துண்டுகள்,தேங்காய் இவற்றுடன் வறுக்கப்பட்ட பொருள்களையும்,உப்பையும் சேர்த்து நன்றாக மிக்ஸியியில் அரைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான நெல்லிக்காய் சட்னி தயார். இதை இட்டிலிக்கு தொட்டு சாப்பிடலாம்.சூடான சாதத்தில் கொஞ்சம் நெய் சேர்த்து அதோடு இந்த சட்டினியையும் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்.செம டேஸ்ட்டா இருக்கும்.

இதையும் படிங்க: அதிக வெய்யிலால் ஏற்படும் களைப்பை விரட்டி, புத்துணர்ச்சி தரும் பாரம்பரிய பானகம்!