பெற்றோர் முன்பே அனைத்து திருமணங்களும் நடைபெற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

 

பெற்றோர் முன்பே அனைத்து திருமணங்களும் நடைபெற வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர்.

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர். சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக் கழக வளாகத்தில் திரௌபதி திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாமக நிறுவனர் ராமதாஸ் குடும்பத்துடன் பார்வையிட்டார். 

ராமதாஸ்

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “இன்றைய காலகட்டத்துக்குத் தேவையான படமாக திரௌபதி உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சம்பவங்களே திரௌபதி படமாக உருவாகி உள்ளது. சமூக விழிப்புணர்வு இந்த படத்தின் மூலம் ஏற்படுத்தப்படட்டும். இந்த படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.  பெற்றோர் முன்பே அனைத்து திருமணங்களும் நடைபெற வேண்டும்” என தெரிவித்தார்.