பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் பெர்ஃபியூம்?

பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் பெர்ஃபியூம்?

பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றை குறிக்கும் தன்மை பெர்ஃபியூம்களுக்கு இருப்பதாகவும், அது உங்களது மனநிலை மற்றும்  உளவியல் சார்ந்த விஷயங்களை வைத்து உங்களது பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

சென்னை: மணம் மயக்கும் பெர்ஃபியூம்கள் உங்களது பெர்சனாலிட்டியை குறிப்பிடும் என பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது.

பஞ்ச பூதங்களில் ஒவ்வொன்றை குறிக்கும் தன்மை பெர்ஃபியூம்களுக்கு இருப்பதாகவும், அது உங்களது மனநிலை மற்றும்  உளவியல் சார்ந்த விஷயங்களை வைத்து உங்களது பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

பூக்கள் சார்ந்த மணம் கொண்ட பெர்ஃபியூம்கள் நீரையும்; மூலிகை, தாவர மணம் வீசும் பெர்ஃபியூம்கள் காற்றையும்; பழங்கள், சுடு தன்மையுடன் இருக்கும் பெர்ஃபியூம்கள் நெருப்பையும்; கேராமல், இனிப்பு வாசனையுள்ள பெர்ஃபியூம்கள் நிலத்தையும்; சாக்லெட், குறைந்த மணம் கொண்ட பெர்ஃபியூம்கள் ஆகாயத்தையும் குறிப்பதாக பல்கலைக்கழக ஆராய்ச்சி ஜர்னல்களில் கூறப்பட்டுள்ளது.

பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் பெர்ஃபியூம்?

ஒருவரது சுத்தத்தை அவர்களிடம் இருந்து வரும் வாசனையை வைத்து சொல்லிவிடலாம். நல்ல பூக்கள மணம் கொண்ட பெர்ஃபியூம்களை தினசரி பயன்படுத்தும் போது, உங்களது உடல் புத்துணர்ச்சியுடனும், உங்களுக்கென புதிய அடையாளத்தையும் பெர்ஃபியூம்கள் அளிக்கின்றன.

பெர்ஃபியூம்களை தேர்வு செய்யும்போது, வேதிப்பொருட்கள் அதிகம் சேர்க்காமல், இயற்கையாக தயாரிக்கப்பட்ட பூக்கள், பழங்கள் மணம் வீசும் பெர்ஃபியூம்களை பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கும் நண்மை தரும். மேலும், பெர்ஃபியூம்கள் வாங்கும்போது, சருமத்திற்கு அலர்ஜி ஏற்படாதவாறு தேர்வு செய்வது நல்லது.  

பெர்சனாலிட்டியை தீர்மானிக்கும் பெர்ஃபியூம்?

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது அனைவரும் அறிந்ததே. அதுபோல், பெர்ஃபியூம்களையும் அதிகளவில் எடுத்துக் கொண்டால் அதனால் சுவாச பிரச்னைகள் ஏற்படவும், மயக்கம் வரவும் வாய்ப்புள்ளது. ஆகவே, அளவுடன் பயன்படுத்தினால் எந்த சேதமும் இல்லை.