பெரியார் கோவிலுக்குள் சென்றார், அபிஷேகம் செய்தார் என ரஜினி கூறியிருந்தால் தான் தவறு- இயக்குனர் வேலு பிரபாகரன்

 

பெரியார் கோவிலுக்குள் சென்றார், அபிஷேகம் செய்தார் என ரஜினி கூறியிருந்தால் தான் தவறு- இயக்குனர் வேலு பிரபாகரன்

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது,

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது என தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரஜினியோ நான் செய்தித்தாளில் வந்ததைதான் பேசினேன் இதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். பெரியாரை அவமதிப்பு செய்த ரஜினியின் கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் வேலு பிரகாகரன், “ரஜினி கடவுள் நம்பிக்கையாளர். கடவுளால் தான் இந்த அளவிற்கு உயர்ந்துள்ளோம் என நினைக்கிறார். கடவுளை மற, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றவர் பெரியார். எனவே தான் வணங்கும் கடவுளுக்கு எதிர் கருத்து சொன்ன பெரியாரை,  ரஜினிகாந்த் விமர்சிக்கிறார். ஏற்ற தாழ்வுகளுக்கு காரணமான கடவுளை பெரியார் எதிர்க்கிறார். இப்படிப்பட்ட கருத்தை தெரிவித்தற்கு ரஜினிக்கு எனது நன்றிகள். பெரியாரை மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.

இயக்குனர் வேலு பிரபாகரன்

ராமர் என்கிற கதாபாத்திரத்தை அவர் ஏற்று கொள்ளவில்லை. அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட இயக்கங்கள் கூறுவது எனக்கு பெருத்த அவமானமாக தெரிகிறது. பெரியார் கோவிலுக்குள் சென்றார், அபிஷேகம் செய்தார் என ரஜினி கூறியிருந்தால் தான் பெரியாருக்கு அவமானம். பெரியாருடைய எண்ணங்களை தான் ரஜினி கூறியுள்ளார். ரஜினி சூழ்ச்சி அறியாதவர். எந்த கூட்டத்தில் நிற்கிறோம் என்பதை அறியாதவர். ரஜினி கூறியதை சாதாரணமாக எடுத்து கொள்ள வேண்டும். காதல் அரங்கம் என்ற என் படம் வெளிவர ரஜினி உதவினார். மனித தன்மையின் நேர்மையை விளக்குவதற்கு அந்த நிகழ்வை பயன்படுத்தினேன். எதிராளிகளையும் தன்மையோடு நடத்துபவர் ரஜினிகாந்த். ரஜினியின் பொதுவாழ்விற்கு பெரியாரின் கருத்துகள் அவசியம். திராவிட இயக்கத்தினர் ரஜினி கூறிய கருத்தை ஏற்று மீண்டும் மூடநம்பிக்கை மாநாடு நடத்த  வேண்டும்” என்று கூறியுள்ளார்.