பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் – திருமாவளவன் 

 

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் – திருமாவளவன் 

பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை அருகே உள்ள போரூரில் நடைபெற்று வரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இஸ்லாமியர்கள் போராட்டத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “பெரியார் குறித்து  பேசியிருப்பது சங் பரிவார் அமைப்பிற்கு நடிகர் ரஜினிகாந்த் பலியாகி விடாமல் இருக்க வேண்டும். வரலாற்றுத் தடங்களில் ராமர் படத்தையோ, ராமர் சிலையையோ பெரியார் சேதப்படுத்தியாதாக தரவுகள் இல்லை. அந்த விளக்கத்தை திராவிட கழக தலைவர்கள் ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இது ரஜினிகாந்திற்கும் தெரியும் என நினைக்கிறேன். 

ரஜினிகாந்த்

எனவே பெரியார் குறித்து அவதூறு  பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்கவேண்டு, அதற்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று நான் நம்புகிறேன். அவர் சமூகநீதி கோணத்திலிருந்து பெரியாரைப் பார்க்க தொடங்கினால் பெரியாரின் போராட்டங்களை அவரால் புரிந்துகொள்ள முடியும். அவர் குறிப்பிட்ட எந்த சாதிக்கும் அல்லது எந்த நம்பிக்கையும் எதிராக செயல்பட்டு வந்தவர் அல்ல. ஆனால் ஆதிக்கம் எங்கிருந்து வந்தாலும் அதை எதிர்ப்போம் என்ற அடிப்படையில் சமூக நீதியை வென்றெடுப்பதற்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்” எனக்கூறினார்.