பெரியாரை சீண்டிய ரஜினி…போயஸ் கார்டன் வீட்டில் பலத்த பாதுகாப்பு!

 

பெரியாரை சீண்டிய ரஜினி…போயஸ் கார்டன் வீட்டில் பலத்த பாதுகாப்பு!

பத்திரிகைகளில் வந்ததை தான் நான்  கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’ என்றார்.  இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து  விளக்கமளித்த ரஜினிகாந்த், ‘1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும்  நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டது என பலரும் உறுதி செய்துள்ளனர்.  இதுகுறித்து அவுட்லுக் பத்திரிகையில் கூட செய்தி வெளியானது. பத்திரிகைகளில் வந்ததை தான் நான்  கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’ என்றார்.  இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

இந்நிலையில் ரஜினிகாந்த் வீடு அமைந்திருக்கும் போயஸ் கார்டனில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கதீட்ரல் சாலை-பின்னி சாலை சந்திப்பு, போயஸ் கார்டன் சந்திப்பு இந்த மூன்று  சாலைகளிலும் போலீசார் நிறுத்தபட்டு உள்ளனர்.

ttn

 அவ்வழியே செல்வோரிடம் விசாரணை செய்த பிறகு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 50 போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் போயஸ் கார்டன் பகுதி முழுவதையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

ttn

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போது  தான் போயஸ் கார்டன் பகுதி பாதுகாப்போடு காட்சியளிக்கும். தற்போது ரஜினிக்கு பாதுகாப்பு அளிக்க மீண்டும் அந்த பகுதி கெடுபிடி நிறைந்த பகுதியாக மாறியுள்ளது.