பெண் போலீஸ் பேண்ட் மாற்றினார் – ஒளிந்திருந்து ஒளிப்பதிவு செய்தார்-கேமராமேன்களின் கேவலமான செயல் ..

பெண் போலீஸ் பேண்ட் மாற்றினார் – ஒளிந்திருந்து ஒளிப்பதிவு செய்தார்-கேமராமேன்களின் கேவலமான செயல் ..

தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களின் சுதந்திரம் பறி போய்விட்டது, செல்போன்களில் காமெரா வந்தபிறகு அனைவரும் பார்ப்பதையெல்லாம் படம்பிடிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் இந்த காமெராவால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். பஜார் முதல் பாத்ரூம் வரை எங்கு காமெரா இருக்கிறதென தெரியாமல் பெண்கள் திண்டாடுகிறார்கள். 

இப்படித்தான் ஒரு பள்ளிக்கூட பாதுகாப்புக்கு வந்த மூன்று பெண் கான்ஸ்டபிள் உடை மாற்றுவதை ஒளிந்திருந்து படம்பிடித்த மூன்று தனியார் தொலைக்காட்சியின் காமெராமேன்கள் கைது செய்யப்பட்டனர். 
ஆந்திராவின் அமராவதியில் உள்ள ZPH பள்ளியின் Assembly பாதுகாப்புக்கு பெண் கான்ஸ்டபிள்கள் வந்தனர். வந்த இடத்தில் ஒரு பெண் போலிஸுக்கு உடல்நிலை சரியில்லாததால் காலை 11.30 மணியளவில் அந்த பள்ளியிலுள்ள ஒரு அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்தார், அப்போது அவர்  திடீரென திரும்பிப்பார்த்தபோது ஒரு கேமரா ஒளியவைத்து அவரை படம்பிடித்துக்கொண்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்று வெளியே ஓடி வந்து தனது உயர் அதிகாரியிடம் புகார் செய்தார்.
இந்த வேலையை  அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தான் செய்தார் என அந்த பெண் கான்ஸ்டபிள் கண்டறிந்து அவர் மீது அங்கிருந்த DSP லஷ்மியிடம் புகார் செய்தார்.
உடனே DSP லஷ்மி அங்கு அனுமதியில்லாமல் வந்த அந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் மீது விசாரணை நடத்தி அவர்கள் மீது  நிர்பயா சட்டப்பிரிவு 354c வில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார் 
இதுபற்றி DSP லஷ்மி ,”இது போல பல சம்பவங்கள் நடைபெறுகின்றன .இப்போது மக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு தரவேண்டிய ஒரு தொலைக்காட்சி காமெராமேன்களே அதுவும் ஒரு போலீஸ் உடைமாற்றுவதை படம் பிடிக்கும் கேவலமான வேலையை செய்தது அதிர்ச்சியளிக்கிறது “என  கூறினார் .