பெண் தாசில்தாரை கதாநாயகி என வர்ணித்த முன்னாள் அமைச்சர்… பா.ஜ.க-ன்னாவே இப்படித்தான் என்று பரவும் ஆடியோ!

 

பெண் தாசில்தாரை கதாநாயகி என வர்ணித்த முன்னாள் அமைச்சர்… பா.ஜ.க-ன்னாவே இப்படித்தான் என்று பரவும் ஆடியோ!

மகாராஷ்டிராவின் பெண் தாசில்தாரை பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கதாநாயகி என்று வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் பெண் தாசில்தாரை பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கதாநாயகி என்று வர்ணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முந்தைய தேவேந்திர ஃபட்னாவிஸ் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் பாபன்ராவ் லோனிகர்.
சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிர மாநிலம் ஜல்னாவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், “தேவேந்திர ஃபட்னாவிஸ், முன்னாள் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல், சுதீர் முங்கந்திவார் ஆகியோரை நாம் அழைக்கலாம். யாரை அழைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்… அதற்கு நாம் கதாநாயகியை அழைக்கலாம்… இல்லை என்றால், நம்முடைய தாசில்தார் மேடத்தை கதாநாயாகியாக அழைக்கலாம்” என்று பேசினார். 

babanrao-lonikar-02.jpg

அவர் அந்த நிகழ்ச்சியில் என்ன பேசினார் என்பது பற்றிய முழு விவரம் கிடைக்கவில்லை. ஆனால், பெண் தாசில்தாரை கதாநாயகி என்று அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரின் பேச்சு தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. “பா.ஜ.க என்றாலே இப்படித்தான், பெண்களை தவறாக பேசினால்தான் பா.ஜ.க” என்று பதிவிட்டு பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
“தான் தவறாக பேசவில்லை. கதாநாயகி, கதாநாயகன் என்பது நம்முடைய செயல்பாட்டை, வேலையை முன்னெடுத்துச் செல்லும் தலைவர்கள் என்ற அர்த்தத்தில் பேசினேன். சந்தேகம் இருந்தால் அகராதியை எடுத்துப் படித்துப் பாருங்கள். இது தவறான வார்த்தை இல்லை. தவறான அர்த்தம் கொள்ளக்கூடாது” என்று முன்னாள் அமைச்சர் விளக்கம் அளித்து வருகிறார்.